பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 08-
தொழில் அதிபர் டத்தோ சோசிலாவதி லாவியா மற்றும் அவரின் இதர மூன்று சகாக்களை மிக கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளான முன்னாள் வழக்கறிஞர் என். பத்மநாபன் மற்றும் தில்லையழகனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை இன்று நிலைநிறுத்தியிருக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை அந்த கோடீஸ்வரின் மகள் எர்னி டெக்ரிதாவதி வரவேற்றுள்ளார்.
பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு பந்திங்கில் ஒரு பண்ணை வீட்டில் நிகழ்ந்த இந்தக் கோரக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையே தீர்வு என்று நீதிபதிகள் நிலைநிறுத்தி உள்ளனர்.
இத்தீர்ப்பின் மூலம் இறைவனுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக 39 வயதுடைய அந்தப் பெண், இன்று Instagram- மில் பதிவேற்றம் செய்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.