அக்டோபர் 08-
மஇகாவின் தேசியப் பொருளாளராக தம்மை நியமித்து இருக்கும் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரனுக்கு மஇகா சிகாம்புட் தொகுதி த்தலைவரும், கட்சியின் புதிய பொருளாளருமான டத்தோ N. சிவகுமார் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மஇகாவின் தேசியப் பொருளாளராக தாம் நியமிக்கப்பட்டு இருப்பது, தம்முடைய சேவைக்கு வழங்கப்பட்ட ஓர் அங்கீகாரமாக கருதுவதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
மலேசிய இந்தியர்களின் 78 ஆண்டு கால பாரம்பரிய கட்சியான மஇகாவின் தேசியப் பொருளாளராக தம்மீது நம்பிக்கை வைத்து, கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இப்பொறுப்பை வழங்கியுள்ளார்.
தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக, கட்சித் தலைமைத்துவத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப சமூக கடப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்ற தாம் கடமைப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சிவகுமார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.