நியூஸிலாந்து மகளிரை தோற்கடித்த அவுஸ்திரேலிய மகளிர்

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியின், நேற்றைய (08.10.2024) ஆட்டம் ஒன்றில், அவுஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணியை வெற்றி கொண்டது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 19.2 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

இன்றைய ஆட்டம்

இதேவேளை, இன்று தென்னாபிரிக்க அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையிலான போட்டியும், இலங்கை, இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன. 

WATCH OUR LATEST NEWS