பாகிஸ்தானில் சம்பவம் செய்த ஹாரி புரூக்! தூளான இலங்கை முன்னாள் வீரரின் சாதனை

அக்டோபர் 10-

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் சாதனை சதம் விளாசினார். 

முதல் டெஸ்ட்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் முல்தானில் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 468 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது. 

ஹாரி புரூக் சாதனை

ஜோ ரூட் 150 ஓட்டங்களை கடந்த நிலையில், இளம் வீரர் ஹாரி புரூக் (Harry Brook) சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் பாகிஸ்தான் மண்ணில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் எனும் சாதனையை அவர் படைத்தார். 

இதற்கு முன்பு இலங்கையின் அரவிந்த டி சில்வா (17 இன்னிங்ஸ்), இந்தியாவின் மொஹிந்தர் அமர்நாத் (18 இன்னிங்ஸ்) ஆகியோர் இந்த சாதனையை செய்திருந்தனர்.   

 

WATCH OUR LATEST NEWS