உலக டென்னிஸ் வாழ்க்கைக்கு விடை கொடுக்கும் பிரபல ஸ்பெய்ன் வீரர்

எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்னர் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ஸ்பெய்னின் ரஃபேல் நடால் அறிவித்துள்ளார்.

டெனிஸ் வரலாற்றில் அவர் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக்கில் ஒற்றையர் தங்கம் வென்றுள்ளார்.

தாம், தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக காணொளி ஒன்றில் கூறியுள்ள அவர், கடந்த கடந்த இரண்டு வருடங்கள் தமக்கு கடினமான வருடங்களாக இருந்தன என்று தெரிவித்துள்ளார்.

கடினமான முடிவு

தமது ஓய்வை பொறுத்தவரை, இது வெளிப்படையாக ஒரு கடினமான முடிவாகும் என கூறியுள்ளார்.

மேலும், இந்த வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பமும் முடிவும் உள்ளது என்று ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS