லஹாத் டத்து , அக்டோபர் 13-
லஹாத் டத்து ஃபெல்டா சஹாபாத், சினாகுட் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றபோது காணாமல் போன 9 வயது சிறுவன், சிதைந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டான்.
சிறுவனின் சடலம் கடற்கரையோரம்
இன்று காலை 7.45 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக லஹாட் டத்து வனவிலங்கு துறை அதிகாரி சில்வெஸ்டர் சைமின் தெரிவித்தார்.
முதற்கட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறையில் கம்போங் சினாகுட்டில் உள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்றிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது!