நிபோங் டெபால்,அக்டோபர் 13-
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகைகளினால் ஏற்பட்ட காற்று தூய்மை கேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, புக்கிட் பஞ்சோர் தொழிற்சாலைப் பகுதியில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக அதன் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பினாங்கு மாநில உள்ளூர் மாநகர ஆட்சி மற்றும் கிராம திட்டக்குழு தலைவர் H’ng Mooi Lye, மே மாதம் தொடங்கி அங்குள்ள குடியிருப்பாளர்கள், பிளாஸ்டிக் எரிக்கும் துர்நாற்றம் குறித்து புகார்கள் செய்த நடவடிக்கையினால், கடந்த செப்டம்பர் மாதம் அன்று இரண்டு தொழிற்சாலைகளையும் பினாங்கு சுற்றுச்சூழல் துறை (DOE) மூட உத்தரவு இட்டிருந்த போதும், அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்துள்ளன என அவர் கூறினார். .