27 குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் அறிகுறிகள்

கோலாலம்பூர், அக்டோபர் 16-

GISB குழுமம் தொடர்பான விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் 558 சிறார்களில், 51.6 விழுக்காட்டினர், பி.எம்.ஐ எனப்படும் உடல் நிறை குறியீட்டுக்கு கீழ் உள்ளனர்.

அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு, அல்லது சிறப்பு கவனம் தேவைப்படும் உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

27 குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பெண்கள். குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர், டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

“இந்த ஆய்வின் மூலம், 46.1% குழந்தைகள் சாதாரண எடையையும், 51.6% குழந்தைகள் ஆரோக்கியமான BMI அளவை விட குறைவான எடையையும், மேலும் 2.7% பேர் உடல் பருமன் வகையிலும் உள்ளனர்,” என்றார் அவர்.

GISB குழும விவகாரம் தொடர்பில், அமைச்சர்கள் விளக்க அமர்வின்போது நான்சி அவ்வாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS