அக்டோபர் 16-
Nayanthara Movie Line Up : திரிஷாவும், நயன்தாராவும் சமகால நடிகைகளாக இருந்தாலும் அதில் திரிஷாவை விட நயன்தாரா தான் தற்போது அதிக படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமாகி தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோயின்களாக வலம் வருபவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 40வயது ஆனாலும் இன்றளவும் தங்களுக்கான மவுசு குறையாமல் இருவருமே செம்ம பிசியாக நடித்து வருகின்றனர். இதில் நடிகை திரிஷா கைவசம் அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமலின் தக் லைஃப், மலையாளத்தில் எவிடன்ஸ், தெலுங்கில் விஸ்வம்பரா ஆகிய 5 படங்கள் உள்ளன. ஆனால் இவரைக்காட்டிலும் நடிகை நயன்தாரா தான் தற்போது அதிக படங்களில் நடித்து வருகிறார். அவரின் கைவசம் உள்ள படங்களை பற்றி பார்க்கலாம்.
மண்ணாங்கட்டி
யூடியூபர் டியூடு விக்கி இயக்கத்தில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் திரைப்படம் மண்ணாங்கட்டி. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் தேவதர்ஷினி, கெளரி சங்கர், நரேந்திர பிரசாத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மூக்குத்தி அம்மன் 2
ஆ.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகின்றனர். ஆனால் இந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். வேல்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இதன் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டெஸ்ட்
நயன்தாரா நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் டெஸ்ட். இப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார். இப்படத்தில் நயன்தாரா உடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

தனி ஒருவன் 2
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் தனி ஒருவன். அப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. அதிலும் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்கிறார். இது ஜெயம் ரவி ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கும் மூன்றாவது திரைப்படமாகும். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

டாக்ஸிக்
நயன்தாரா கைவசம் உள்ள பான் இந்தியா படம் தான் இந்த டாக்ஸிக். இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் யாஷின் அக்கா கேரக்டரில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

கவின் படம்
பெரிய நடிகைகள் என்றால் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர தயங்குவார்கள். ஆனால் நடிகை நயன்தாரா கதை பிடித்திருந்தால் எந்த ஹீரோவுடனும் ஜோடி சேர்ந்து நடித்திடுவார். அதற்கு சிறந்த உதராணம் இளம் நடிகர் கவினுக்கு ஜோடியாக அவர் நடிக்கும் பெயரிடப்படாத படம். இப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். இவர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

டியர் ஸ்டூடெண்ட்ஸ்
நயன்தாரா கைவசம் உள்ள 7வது படம் டியர் ஸ்டூடண்ட்ஸ். மலையாள படமான இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் அவர் டீச்சராக நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.