கோலாலம்பூர், அக்டோபர் 16-
ஓன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு மலேசியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் பத்து பேரை இலங்கை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
நான்கு மலேசியர்களும், 6 இதர நாட்டினரும் இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் வட மேற்கு மாநிலமான புத்தாளத்தின் கடலோரப்பகுதியான Chilaw என்ற இடத்தில் இலங்கைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்கள் Iranawila- சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நிதி தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கிடைக்கப்பெற்றத் தகவலின் அடிப்படையில் அந்த பத்து பேரும் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக இலங்கை போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
நான்கு மலேசியர் ஆடவர்கள், எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள், ஒரு பெண், கென்யா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் சீனப்பிரஜை ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் போலீசார் குறிப்பிட்டனர்.