’ஜான்சன் & ஜன்சன் பவுடரால் புற்றுநோய்’.. 15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அக்டோபர் 17-

இவான் ப்ளாட்கின் போன்று ஏராளமானோர் ஜான்சன் & ஜான்சன் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அனைவருமே ஜான்சன்&ஜான்சன் டாலி தயாரிப்புகள் அஸ்பெஸ்டாஸ், மீசோதெலியோமா மற்றும் பிற புற்றுநோய்களை உருவாக்குகிறது என்று குரல் எழுப்பியுள்ளனர்

அமெரிக்க ஐக்கிய மாநிலங்களுள் ஒன்றான கனெடிகட் பகுதியைச் சேர்ந்த இவான் ப்ளாட்கின் என்பவர், 2021 ஆண்டு முதல் ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு அவர் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மருத்துவரிடம் சென்ற அவருக்கு, மீசோதெலியோமா என்ற அரியவகை புற்றுநோய் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

ஜான்சன் & ஜான்சன் பவுடரின் ஒவ்வாமையால்தான் தனக்கு மீசோதெலியோமா நோய் உறுவானதாகக் கூறி நீதிமன்றத்தில் ஜான்சன் & ஜான்சன் கம்பெனி மீது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இவரின் கூற்றை ஆராய்ந்த சுப்பீரியர் நீதிமன்ற நடுவர் குழு, ஜான்சன் & ஜான்சன் நஷ்ட ஈடாக இவான் ப்ளாட்கிற்கு 15 மில்லியன் டாலர் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு

வழங்கியது.

இவான் ப்ளாட்கின் போன்று ஏராளமானோர் ஜான்சன் & ஜான்சன் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அனைவருமே ஜான்சன் & ஜான்சன் டாலி தயாரிப்புகள் அஸ்பெஸ்டாஸ், மீசோதெலியோமா மற்றும் பிற புற்றுநோய்களை உருவாக்குகிறது என்று குரல் எழுப்பி இருந்த நிலையில், இவான் ப்ளாட்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது  ஜான்சன் & ஜான்சன் மீது அதிர்ப்திக் கொண்ட 62000 அதிகமானோருக்கு கிடைத்த பதிலாகும்.தூள் தயாரிப்புகளை அமெரிக்க சந்தையில் இருந்து ஜான்சன்&ஜான்சன் திருப்பப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS