3 முறை தற்கொலை முயற்சி? குழந்தை இருப்பதை உறுதிசெய்த பாக்யராஜ் மகள் – கணவர் யார்?

அக்டோபர் 17-

சரண்யா பாக்யராஜ்

நடிகர் பாக்யராஜ் மகள் சரண்யா, தன் அப்பா இயக்கத்தில் 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, மும்தாஜுடன் டிக் டிக் டிக் என்ற படத்திலும் மோகன் லாலுடன் போட்டோகிராபர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அதன்பின் சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர். ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்றுவந்த சரண்யா காதல் தோல்வியால் வீட்டிலேயே முடங்கினார்.

மேலும், தன் வீட்டில் இருக்கும் போதே மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் சரண்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நானும் சாந்தனுவும் ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கிறோம். ஆனால் அதனை நாங்கள் எப்போதும் வெளியில் காட்டிக்கொண்டது இல்லை.

தற்போதைய நிலை

சாந்தனு நடித்திருந்த ப்ளூ ஸ்டார் படம் எனக்கு பிடித்திருந்தது. நான் குழந்தையையும் பார்த்துக்கொண்டு நான் செய்யும் காஸ்ட்யூம் டிசைனர் வேலையையும் பார்ப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய அம்மா எப்படி சிரமப்பட்டிருப்பார் என்பது இப்போதுதான் புரிகிறது.

னக்கு என்னுடைய குடும்பத்தினர்தான் எல்லா விஷயங்களிலுமே சப்போர்ட்டாக இருக்கிறார்கள். இதனால் புதிய தாயாக நான் இருந்தாலும் தூங்கும் நேரம் எனக்கான ஸ்பேஸ் ஆகியவை கிடைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவருடைய கணவர் யார் என்பது குறித்து அவர் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. எனவே, சரண்யா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

WATCH OUR LATEST NEWS