பினாங்கு, அக்டோபர் 29-
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும் மக்களுக்கு சேவையாற்றும் உன்னதப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப்பணியாளர்களின் அளப்பரிய சேவையை போற்றும் வகையில் பினாங்கு, சுங்கை பகப் மருத்துவப் பணியாளர்களுக்கு மேலவை உறுப்பினர் டாக்டர் லிங்கேஸ்வரன் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி சிறப்பு செய்தார்.
சுங்கை பகப் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அதிகாரி என்ற முறையில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மருத்தவப்பணியாளர்களின் இடைவிடாத சேவை, அவர்களின் அர்ப்பணிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, எவ்வளவு கட்டாயமானது என்பதை தாம் உணர்ந்துள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
மருத்துவப் பணிகள் மத்தியிலும் தீபாவளி பண்டிகையின் போது மகிழ்ச்சியுடன் தங்கள் பணிகளை தொடர வேண்டும் என்ற நோக்கிலேயே தீபாவளி அன்பளிப்பை அனைத்துப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

சுங்கை பகப் மருத்துவமனையில் இந்தியப் பணியாளர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் என அனைத்துப் பணியாளர்களுக்கும் தீபாவளி அன்பளிப்பை வழங்கிய டாக்டர் லிங்கேஸ்வரன், தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
