53 வயது ஆண் ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்கப்பட்டது

Tanah merah தாமான் selasih பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வீசிய்துர்நாற்றம், 53 வயது ஆண் ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது.

நேற்று இரவு 11.50 மணியளவில், மேல் மாடி படுக்கையறையில் அவர் உயிரிழந்த நிலையில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Tanah merah மாவட்ட காவல் துறை தலைவர், Superintendan Mohd Haki Hasbullah, அந்த நபர் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கக்கூடும் எனவும், சடலம் புழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உறுதிப்படுத்தினார்.

பொது மக்கள் கொடுத்த தகவல்கள்படி, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல் பெற்றதாகவும் இறந்தவர் தனது 90 வயதுக்கும் மேற்பட்ட, நினைவிழந்த தந்தையுடன் வசித்து வந்தார் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது, நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவிதமான குற்றச்செயல் தொடர்பும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சடலம் டானா மேரா மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது என தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS