சுமார் 1,400 அரசு ஊழியர்கள் கையெழுத்திடவில்லை

டிச. 8-

40 நாட்கள் அவகாசத்திற்குப் பிறகு, கடந்த நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த SSPA எனப்படும் பொதுச் சேவை ஊதியத் திட்டத்திற்கு சுமார் 1,400 அரசு ஊழியர்கள் கையெழுத்திடவில்லை என பொதுச் சேவைத் துறையின் தலைவர் Tan Sri Wan Ahmad Dahlan Abdul Aziz கூறினார்.

தற்போதுள்ள 1.5 மில்லியன் அரசு ஊழியர்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவு என்று தெரிவித்தார். இந்தத் தேர்வைத் தெரிவு செய்யாத அரசு ஊழியர்கள் இருப்பது இயல்பானது. அவர்கள் ஏற்கனவே தங்களுக்குப் பொருத்தமான முடிவுகளை எடுத்திருக்கலாம் என்று Wan Ahmad Dahlan வலியுறுத்தினார்.

யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை, அவர்கள் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுப்பார்கள் என்று நம்புவதாகக் கூறும் Wan Ahmad Dahlan, இதனைத் தேர்வு செய்யாதவர்கள் பிற்காலத்தில் அவர்கள் வருத்தம் அடையாமல் இருக்க, அரசாங்கம் தொடர்ந்து கலந்துரையடலை நடத்தி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

SSPAவை தேர்ந்தெடுக்காத அரசு ஊழியர்கள் மனம் மாறி இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்கவோ அல்லது நீட்டிக்கவோ செய்யாது என்று அவர் தெளிவு படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS