ஜன.7-
பள்ளிக்கூடப் பேருந்து நடத்துநர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் இயக்கச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த பிப்ரவரி முதல் 2025/2026 அமர்வுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய ‘கடினமான முடிவை’ எடுக்க வேண்டிய அவசியமில்லாமல் அரசாங்கம் உதவ வேண்டும் என்று கோரியுள்ளது மலேசியப் பள்ளிக்கூடப் பேருந்து சங்கங்களின் கூட்டமைப்பு.
டீசல் விலை தவிர மற்ற செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசாங்கம் தங்களுக்கு உதவ வேண்டும் என்று அவ்வமைப்பின் தேசியத் தலைவர் Amali Munif Rahmat வலியுறுத்தியுள்ளார்.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு இறக்குமதி உதிரிபாகங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் செலவுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். உள்ளூர் சந்தையை விட இறக்குமதி பொருட்களின் விலை குறைவாக இருப்பதால், அவற்றை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
வரவிருக்கும் புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்திற்குள் பள்ளிப் பேருந்து கட்டணம் 25 முதல் 30 விழுக்காடு வரை உயரும் என்று Pertubuhan Kebajikan Industri Bas Sekolah Malaysia BSM எனப்படும் மலேசியப் பள்ளிக்கூடப் பேருந்து தொழில்துறை நல அமைப்பு தெரிவித்துள்ளது. உதிரிபாகங்களின் விலை உயர்வு, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சட்டவிரோத வாகனங்களின் போட்டி ஆகியவை பள்ளிப் பேருந்து கட்டண உயர்வுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.