இஸ்ரேலிய நபருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜன.7-

துப்பாக்கிகள் வர்த்தகம் செய்ததாகவும், தோட்டாக்களை வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓர் இஸ்ரேலியப் பிரஜையான Avitan Shalom- மிற்கு எதிரான வழக்கு விசாரணையை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் வரும் ஜனவரி 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

39 வயதுடைய அந்த இஸ்ரேலியப் பிரஜை தனக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மையையை புரிந்து கொள்வதற்கும், வழக்கின் சாரம்சத்தை அறிந்து கொள்வதற்கும் ஒரு மொழிப்பெயர்ப்பாளரின் அவசியத்தை அவரின் வழக்கறிஞர் Dato Naran Singh நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

குற்றவியல் கட்டம் 270 ஆவது பிரிவும், ஒரு மொழியை சரிவரப் புரிந்து கொள்ள முடியாதவருக்கு அவரின் தாய்மொழியில் ஒரு மொழிப்பெயர்ப்பாளருக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று Dato Naran Singh வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த இஸ்ரேலிப் பிரஜைக்கு மொழிப்பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்வதற்கு ஏதுவாக நீதிபதி Zainal Abidin வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய Dato Naran Singh , தமது கட்சிக்காரருக்கு இப்ரானி மொழிப்பெயர்ப்பாளரை கோரியிருப்பதாக தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS