ஜன.12-
திரெங்கானுவின் Rhu Muda கடற்கரையில் நச்சுத்தன்மை கொண்ட ” Portuguese Man of War ” ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் திரங்கானு மலேசியப் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் , சுற்றுச்சூழல் புலத்தின் மூத்த விரிவுரையாளர் Roswati Md Amin.
இந்த ஜெல்லிமீன்கள் நச்சுள்ளவை , அவை இறந்த பின்பும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அவற்றை தொட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இந்த உயிரினங்கள் நீரோட்டத்திற்கும் காற்றின் திசைவேகத்திற்கும் ஏற்ப நகர்கின்றன, தற்போதைய பருவமழை காற்றின் காரணமாக அவை கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஜெல்லிமீன்கள் பொதுவாக பசிபிக் கடல், இந்தியக் கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இந்த உயிரினங்கள் கடற்கரையில் குவிந்துள்ளதால், குறிப்பாக குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று Roswati அறிவுறுத்தியுள்ளார். மீனவர்களும் தங்கள் வலைகளில் ஜெல்லிமீன்கள் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.