இரு வழி உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

லண்டன், ஜன.16-


மலேசியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் இடையில் இருவழி உறவை மேம்படுத்தும் முயற்சியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரிட்டன் பிரதமர் சர் கெர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையின் போது, அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வியூக பங்காளித்துவம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் முக்கியமாக விவாதித்தனர்.

இதில் பொருளாதாரம், தற்காப்பு மற்றும் கல்வி ஆகியவை அடிப்படையாக விளங்கியது என்று நேற்று புதன்கிழமை எண். 10, டாவ்னிங் ஸ்திரீட்டில் ஸ்டார்மருடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

தமது தலைமையிலான மலேசிய அமைச்சரவைக்கும், ஸ்டார்மர் தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதற்கு கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படும். இது மலேசியாவிற்கு மட்டுமின்றி, ஆசியானையும் உள்ளடக்கியிருக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS