ஜன. 19-
சிலாங்கூர், கப்பாரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சுங்கத்துறை அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரை அடுத்து, மலேசிய சுங்கத்துறை காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய இந்த விவகாரம் உட்பட, தங்கள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எந்த தவறுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாகவும் முழுமையாகவும் நடைபெற சுங்கத்துறை உறுதுணையாக இருக்கும் என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
சுங்கத்துறை எந்தவொரு ஊழல் அல்லது முறைகேட்டிலும் ஈடுபடும் அதிகாரிகள் யாரையும் பாதுகாக்காது. ஆவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியிலும் ஜனவரி 14 ஆம் தேதியிலும் சமூக ஊடகங்களில் பரவிய காணொலியில், சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட சிலர் ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தி 1 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பறித்ததாகக் கூறப்பட்டது.