கோலாலம்பூர், ஜன. 20-
தாம் வாடகைக்கு இருந்து வரும் வீட்டில் பேய் குடியிருந்து வருவதாகவும், அதன் தொல்லையை தாங்க முடியாத நிலையில் தங்களுக்கு உதவும்படி ஒரு சீன தம்பதியர், கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் உதவியை நாடியுள்ளார்.
தம்முடைய அரசியல் வாழ்க்கையில் மக்களின் பலதரப்பட்ட பிரச்னையை சந்தித்து விட்ட தாம், முதல் முறையாக ஒரு பேய் பிரச்னைக்கு தீர்வு காணும்படி தமது தொகுதியில் உள்ள வாக்காளர் தமது உதவியை நாடியிருப்பதாக லிம் லிப் எங் குறிப்பிட்டார்.
இது உண்மையிலேயே தம்முடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு நூதன அனுபவம் என்று அந்த டிஏபி எம்.பி. கூறுகிறார். தங்களின் வாடகைக்கு இருக்கும் பேய் வீட்டில் தங்களால் தொடர்ந்து நிம்மதியாக குடியிருக்க முடியாது என்றும் வீட்டு உரிமையாளருடன் தாங்கள் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த கால வரம்பை முன்கூட்டியே துண்டித்துக்கொடுக்க மத்தியஸ்தராக பணியாற்றும்படி அந்த சீன தம்பதியர் தம்முடைய உதவியை நாட்டியுள்ளதாக லிம் லிப் எங் தெரிவித்தார்.