ஊழல் துடைத்தொழிப்பு பயிற்சி: இந்தியா ஆர்வமாக உள்ளது

கோலாலம்பூர், ஜன.23-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர். எம்மின் மலேசிய லஞ்ச தடுப்பு அகாடமியில் வழங்கப்படும் அனைத்துலக பயிற்சிகள் மற்றும் கல்வியியல் பயிற்சிகளில் பங்கேற்பதற்கு இந்தியா ஆர்வமாக உள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியை மலேசியாவிற்கான இந்தியத் தூதரர் B.N. ரெட்டி, மரியாதை நிமித்தமாக நடத்திய சந்திப்பானது, லஞ்ச ஊழலை வேரறுப்பதில் இந்தியா கொண்டுள்ள ஆர்வத்தை புலப்படுத்தியுள்ளது.

அஸாம் பாக்கிக்கும், இந்தியத் தூதரர் ரெட்டிக்கும் இடையிலான இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதில் இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து வியூகம் கொள்வது குறித்து இரு நாடுகள் முதன்மை கவனம் செலுத்தியிருப்பதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அனைத்துலக அமைப்புகளும் எஸ்.பி.ஆர்.எம் கொண்டுள்ள ஒத்துழைப்பை மேற்படுத்திக்கொள்ள விரும்பும் அதேவேளையில் ஊழல் தடுப்பு அணுகுமுறைகளை இந்திய அறிய முற்பட்டது குறித்து அதன் தூதர் ரெட்டியை பாராட்டுவதாக அசாம் பாக்கி தமது உரையில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS