பாங்காக், ஜன.24-
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காற்றுத் தூய்மைக் கேட்டால் 350க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக ஆகக் கடைசித் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. அப்பள்ளிகள் 31 மாவட்டங்களில் உள்ளன.
பாங்காக்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு ஒரு வாரத்திற்கு இலவச பொது போக்குவரத்துச் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நகரங்களில் கனரக வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுமாறும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைக்க மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார். தலைநகரில் கட்டுமானப் பணிகளைக் குறைப்பது, அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.