ராஷ்ஃபோர்டின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலை

விளையாட்டாளர்களை மாற்றிக் கொள்ளும் தவணை முடிவடையும் வரை ஓல்ட் டிராஃபோர்டில் மார்கஸ் ராஷ்ஃபோர்டின் எதிர்காலம் நிச்சயம் இல்லை என அமோரிம் கூறியுள்ளார். 27 வயதான அந்த ஆட்டக்காரர் டிசம்பர் 12 முதல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக எந்த ஆட்டத்திலும் களமிறங்கவில்லை. மேலும் ஓல்ட் டிராஃபோர்டுக்கு வெளியே ஒரு புதிய சவாலை விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 
 
ராஷ்ஃபோர்ட் புதன்கிழமை கேரிங்டனில் பயிற்சி பெற்றார். ஆனால் யூரோபா லீக்கில் ரேஞ்சர்ஸ் அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் தனது அணி வெற்றி பெற்றதை மட்டுமே ஸ்டாண்டில் இருந்து பார்த்தார். இந்நிலையில் பிப்ரவரி 3 விளையாட்டாளர்களை மாற்றிக் கொள்ளும் தவணை முடிவடையும் வரை, யுனைடெட் மேலாளர் அமோரிம், ராஷ்ஃபோர்டின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவராக இருக்கிறார். 

ராஷ்ஃபோர்ட் பார்சிலோனாவில் சேர முடியும் என நம்புகிறார் என்று நம்புகிறார். ஆனால் லா லீகா கிளப் நிதி நெருக்கடி காரணமாக புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடியாது. ஜெர்மன் கிளப்பான போருசியா டார்ட்மண்டும் ஆர்வமாக உள்ளது, ஆனால் ராஷ்ஃபோர்டின் முழு சம்பளத்தை வாரத்திற்கு 325,000 பவுண்டுகள் (RM1.78 மில்லியன்) செலுத்த வேண்டும் என்று யுனைடெட்டின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பின்வாங்கியது. 
 
இவ்விவ்வேளையில், தனது மற்றொரு வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோவுக்கு செல்சியா அதிகாரப்பூர்வ அழைப்பை முன் வைக்குமா என அந்த யுனைடெட் மேலாளர் காத்திருக்கிறார். 

WATCH OUR LATEST NEWS