நாட்டுக்கோட்டை நகரத்தாருடன் இணைந்து இரண்டாவது ஆண்டாக பினாங்கு ஒற்றுமைத் தைப்பூச விழா- பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அறிவிப்பு

பினாங்கு, ஜன.28-

நீண்ட நெடிய வரலாற்றைக்கொண்ட பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தாருடன் இணைந்து இரண்டாவது ஆண்டாக பினாங்கு ஒற்றுமை தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர் தெரிவித்துள்ளார்.

இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்கு பினாங்கு மட்டுமின்றி மலேசியா முழுவதும், உலக முழுவதும் உள்ள இந்துக்களை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அழைப்பதாக ராயர் குறிப்பிட்டார்.

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவையொட்டி பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் தைப்பூச விழா பத்திரிகையை முழு மரியாதையுடன் நாட்டுக்கோட்டை நகரத்தார் கோவில் அறங்காவலர்களிடம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்த பின்னர் பேசுகையில் ராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அறப்பணி வாரியம் சார்பில் தலைவர் என்ற முறையில் ராயரும், ஆணையர் என்ற முறையில் டத்தோ ஜே. தினகரனும் இணைந்து தைப்பூச விழா பத்திரிகையை வழங்கினர்.

2025 ஆம் ஆண்டு தைப்பூச விழாவை நாம் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாட வேண்டும் என்று ராயர் கேட்டுக்கொண்டார்.

தைப்பூச விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதையும் ராயர் தமது உரையில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS