சிறுத்தை சிவா, ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு படங்கள் கொடுத்து முக்கிய இயக்குனராக வலம் வந்தவர். ஒளிப்பதிவாளராக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றிய சிவா, கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படமே நல்ல ஹிட் கொடுக்க அஜித்தை வைத்து ‘வீரம்’, ‘விஸ்வாசம்’ போன்ற மெகா ஹிட் படங்களையும் கொடுத்தார்.
ரஜினியை வைத்து ‘அண்ணாத்த‘ என்ற படத்தையும் இயக்கினார். கடைசியாக சூர்யாவை வைத்து ‘கங்குவா’ படம் பெரிய பொருட்செலவில் இயக்கினார். ஆனால் கதை திரைக்கதையில் சொதப்ப தோல்வியை சந்தித்தது.
‘கங்குவா’ படத்திற்கு பின் சிவா அஜித்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படம் இப்போதைக்கு இல்லை என தெரிகிறது. தற்போது என்ன தகவல் என்றால் சிறுத்தை சிவா, அடுத்து நடிகர் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.