கோலாலம்பூர், பிப்.12-
வகுப்பறைகளில் அதிகப்படியான மாணவர்கள் பயிலும் பிரச்சினையைச் சமாளிக்க இந்த ஆண்டு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கல்வி துணை அமைச்சர் வொங் கா வோ கூறினார். கல்வி அமைச்சு Sistem Binaan Berindustri – IBS எனப்படும் தொழில்துறை கட்டுமான அமைப்பு வகையிலான அறைகளை அமைக்கும், இதன் இயற்பியல் நிலை சாதாரண வகுப்பறைகளைப் போலவே இருக்கும் என்றார்.
Cyberjaya தேசியப் பள்ளி உட்பட சில பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட இந்த முறை, அதிகப்படியான பள்ளிகளின் பிரச்சினையை வெற்றிகரமாக தீர்த்துள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு, IBS அறைகளைப் பயன்படுத்தி கூடுதல் வகுப்பறைகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படும் என வொங் கா வோ தெரிவித்தார்.
முன்னதாக, சில நகர்ப்புற பள்ளிகளில் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் வரை இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வந்துள்ள நிலையில், வகுப்பில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் இருப்பது கற்றல் அமர்வுகளைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.