ஈப்போ, பிப்.15-
பேரா மாநிலத்தில் சமூகப் பணியை மேற்கொண்டு வரும் பேரா பணி ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரா மாநில ல் தமிழ்ப்பள்ளிகளில் வசதி குறைந்த 500 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஈப்போவில் உள்ள அரசினர் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சங்கம் தொடக்கத்தில சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் சேவை வழங்கி வந்தது.
பின்னர் சமூகப் பணியில் ஈடுபட உந்துதல் ஏற்படுத்தப்பட்டதால் தொடக்கமாக தமிழ்ப்பள்ளியில் படிக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ பள்ளிச் சீருடைகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கும் பணியைத் தொடங்கியது்
தாங்கள் வழங்கி வரும் உதவி திட்டங்களுக்கு உந்துதல் ஏற்படுத்தும் வகையில் சுவாரா ரக்யாட் மலேசியா அமைப்பின் தலைவர் டத்தோஸ்ரீ தியாகராஜா பஞ்சட்சரம் மூலம் வழி இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளியில பயின்று வரும் வசதி குறைந்த 500 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, புத்தகப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக பேரா பணி ஓய்வு பெற்ற போலீஸ்கார்கள் சங்கத்தின் தலைவர் புவனேஸ்வரன் கணேசன் கூறினார்.
வசதி குறைந்த மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்க பல திட்டங்களை தமது சங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் பேசினார்
டத்தோஸ்ரீ தியாகராஜா இந்திய சமுகம் எதிர்காலத்தில் சிறபுடைய இயக்கமாக விளங்க கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கு தமது ஆதரவு தொடரும் என்றார்.
பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்பள்ளிகளில் 117 பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை மற்றும் புத்தகப்பை அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்றார்.