ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஸ்குவாஷ் அணிகள் தோல்வியடைந்ததால் மலேசியா இரட்டை வெள்ளிப் பதக்கங்களை வென்றது.
ஆண்கள் அணியினர் தென் கொரியாவுக்கு எதிராகப் போராடினர். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. தென் கொரியாவுக்கு அதில் சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது. பெண்கள் அணியைப் பொறுத்தவரை, மலேசியா 0-2 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கிடம் தோல்வியடைந்ததால், பட்டத்தைத் தக்க வைத்து கொள்ளத் தவறியது.
2011 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கடைசி சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு ஹாங்காங் நான்காவது பட்டத்தை கைப்பற்றியது.