தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘கங்குவா’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா இணைய உள்ளார்.
இந்நிலையில், அடுத்து சூர்யா நடிக்கப்போகும் படம் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, சூர்யா அடுத்து லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சூர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க உள்ளார்.
மேலும், இப்படம் இந்தியாவின் முதல் என்ஜின் எப்படி உருவானது என்பதைப் பற்றிய கதை என்பதால் ‘760 சிசி’ என படத்தலைப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.