இது எங்களுக்கு மோசமான ஆண்டு – கார்டியோலா

மாட்ரிட், பிப்.20-

UEFA சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து மான்செஸ்டர் சிட்டி வெளியேற்றப்பட்டுள்ளது.  ரியல் மாட்ரிட்டுடனான அது 3க்கு 1 என்ற ஜோல் கணக்கில் தோல்வியுற்றது. ரியால் நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோலடித்து அவ்வணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தார். அதன் மூலம் 6-3 என்ற மொத்த கோல்களின் அடிப்படையில் ரியால் கடைசி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியது.  

இவ்வேளையில், லீக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மான்செஸ்டர் சிட்டி மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என அதன் நிர்வாகி று பெப் கார்டியோலா ஒப்புக்கொண்டார். அவ்வாட்டத்தில் சிட்டி சற்று தடுமாறியது. கடந்த வாரம் சொந்த மைதானத்தில் 3-2 முதல் லெக்கில் தோல்வி கண்டது. 
 
நான்கு சீசன்களில் சிட்டி ஸ்பானிய ஜாம்பவான்களால் வெளியேற்றப்பட்டது இது மூன்றாவது முறையாகும், ஆனால் 2016 இல் கார்டியோலா கிளப்பில் இணைந்த பிறகு முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்கள் கடைசி 16 க்கு முன்னேறத் தவறிவிட்டனர். 

லீக் கட்டத்தில் 36 அணிகளில் சிட்டி 22வது இடத்தைப் பிடித்ததன் மூலம், இந்த முறை போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும் வகையில் சமநிலையில் இருந்தது. 
 
 
இந்த ஆண்டு எங்களுக்கு ஒரு மோசமான ஆண்டாக உள்ளது. அணியைச் சரிப்படுத்தி இன்னும் பலப்படுத்த வேண்டியிருப்பதாக கார்டியோலா சொன்னார். சிட்டி £170 மில்லியன் (சுமார் RM948 மில்லியன்) செலவழித்து Omar Marmoush, Nico Gonzalez, Abdukodir Khusanov மற்றும் Vitor Reis கிளப்பிற்கு கொண்டு வந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  

WATCH OUR LATEST NEWS