கொலும்பு, பிப்.21-
இலங்கியில் ரயில் மீது ஆறு காட்டு யானைகள் பரிதாபமாக மாண்டன. மட்டக்களப்பில் இருந்து கொலும்பு நோக்கி பயணித்த ரயில், கல்லோயா ரயில் நிலையம் அருகே சென்ற போது காட்டு யானைக் கூட்டம் மீது மோதியது. அதில் ஆறு யானைகள் பலியான வேளை ஒரு யானைக்குக் காயம் ஏற்பட்டது.
அச்சம்பவத்தால் ரயில் தடம் புரண்டது. அங்கு ரயில் போக்குவரத்து தடைபட்டது. சில ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.