சினிமாவில் மீண்டும் நுழைகிறாரா ஷாலினி?

நடிகர் அஜித்தின் மாறுபட்ட நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. அஜித்துடன் இப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, ஆரவ், அர்ஜுன் என பலர் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். அதை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஜோடியாக மீண்டும் த்ரிஷா நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி சினிமாவில் மீண்டும் நுழையவிருப்பதாக தகவல் இணையத்தில் பரவ தொடங்கி உள்ளது. முன்னணி நடிகையாக வலம் வந்த ஷாலினி திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி கொண்டார். தற்போது அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் ஷாலினி நடித்திருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஒரு வேளை ஷாலினி இப்படத்தில் நடித்திருந்தால், அஜித்துக்கு ஜோடியாக அவர் 25 ஆண்டுகளுக்கு பின் நடிக்கும் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.  

WATCH OUR LATEST NEWS