கோதாவரியில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி மரணம்

ராஜமுந்திரி, பிப்.26-

ஆந்திராவில் கோதாவரி நதியில் நீராட சென்ற ஐந்து பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவிலுக்கு செல்வதற்கு முன்னர், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், தாடிப்புடி கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் கோதாவரி நதியில் நீராட சென்றனர். 

அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில் ஏழு பேர் பத்திரமாக கரை திரும்பினர். ஆனால், எஞ்சிய ஐந்து பேர் நதியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால், அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அந்த ஐவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

WATCH OUR LATEST NEWS