மான்செஸ்டர், பிப்.27-
மான்செஸ்டர் சிட்டி பிரிமியர் லீக்கில் முதலிடத்திற்குத் திரும்பும் என அதன் நிர்வாகி பெப் கார்டியோலா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். டோட்டன்ஹாமுக்கு எதிராக எர்லிங் ஹாலண்ட் அடித்த கோலின் வழி 1-0 என்ற கோல் கணக்கில் சிட்டி வெற்றி பெற்றதை அடுத்து அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
ஹாலண்டின் 12வது நிமிட கோல், லீக் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியதால், அடுத்த பருவத்திற்கான சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை சிட்டி வலுப்படுத்திக் கொண்டது.
லிவர்பூல் இந்த சீசனில் பட்டத்தை வெல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்னி ஸ்லாட்டிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த சிட்டி, கடந்த சில மாதங்களாக லீக் புள்ளிப் பட்டியலில் பின் தங்கியுள்ளது.
பிளே-ஆஃப்களில் ரியல் மாட்ரிட்டிடம் தோற்று சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்டியோலா இப்போது FA மட்டுமே இந்த சீசனில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பாகக் கொண்டுள்ளார்.
இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் சிட்டி நிச்சயம் முதலிடத்திற்குத் திரும்பும். அணியில் வயதான வீரர்களைக் கொண்டிருக்கிறது, பல நிலைகளில் பிரீமியர் லீக் அனுபவம் இல்லாத ஆட்டக்காரகளும் இருக்கிறார்கள். எனினும் சிட்டி தனது பொற்காலத்திற்குத் திரும்பும் என்று கார்டியோலா நம்புகிறார்.