கோலாலம்பூர், மார்ச்.01-
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் மசீச போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவது, கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது, போட்டியிடக்கூடிய தொகுதிகளில் வெற்றியை மீட்டெடுப்பது மூலமே இழந்த கண்ணியத்தை மீட்க முடியும் என்று மசீச நம்புவதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் இன்று அறிவித்துள்ளார்.