மலேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவர் பதவியை நோர்சா தற்காத்துக் கொள்வார்

கோலாலம்பூர், மார்ச்.01-

2025-2029 ஆம் ஆண்டுக்கான மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் (MOM) தலைவர் பதவியை ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் 44 ஆவது MOM ஆண்டு பொதுக் கூட்டத்தில் தற்காத்துக் கொள்வேன் என்று டான்ஶ்ரீ  முகமட் நோர்சா ஜகாரியா உறுதிப்படுத்தினார். 
 
இன்று ஷாங்-ரி லாவில் MOM மற்றும் மலேசியா ஸ்டேடியம் கார்ப்பரேஷன் (PSM) இடையேயான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்விற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், “ஆம், நான் அப்பதவியைத் தற்காத்துக் கொள்வேன் ” என்று கூறினார். 

இதற்கிடையில், இந்த தேர்தலில் MOM துணைத் தலைவர் பதவியை பாதுகாப்பதா இல்லையா என்பது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க டான்ஸ்ரீ ஹமிடின் முகமட் அமின் மறுத்துவிட்டார். 
 
இரண்டு மிக உயர்ந்த பதவிகளுக்கு கூடுதலாக, ஐந்து துணைத் தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர் மற்றும் இரண்டு உதவியாளர் பதவிகளுக்கும், மேலும் பல காலியிடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. 
 
இவ்வேளையில், மொஹமட் நோர்சா தேசிய தடகள வீரர் மொஹமட் அனிக் கஸ்டன் மற்றும் தேசிய நீச்சல் வீரர் கியூ ஹோ யீன் ஆகியோரை MOM தடகள கல்வி நிதியின் முதல் இரண்டு பெறுநர்களாக அறிவித்தார். அவர்களின் பட்டப்படிப்பு வரை ஒவ்வோர் ஆண்டும் அவர்களுக்கு 10,000 ரிங்கிட் வழங்கப்படும். 

WATCH OUR LATEST NEWS