மாராங், மார்ச்.02-
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய தலைமுறை அடையாள அட்டை – MyKad ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் MyKad இன் மோசடியையும் தவறான பயன்பாட்டையும் தடுப்பதற்கு உறுதி பூண்டுள்ளது தேசிய பதிவுத்துறை. புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டவுடன், பழைய MyKad பயன்பாடு நீக்கப்பட்டு, அனைத்து வைத்திருப்பவர்களும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பிற்கு மாற வேண்டும் என்று பதிவகத்தின் தலைமை இயக்குநர் பட்ரூல் ஹிஷாம் அலியாஸ் கூறினார். இந்த அடையாள அட்டைகளைப் போலியாகத் தயாரிக்கும் நடவடிக்கைகள் கூட்டாக மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் கைதுகள் நடைபெறுகின்றன என்று அவர் கூறினார்.