மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டுத் திரும்பியது

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.16-

பிலிப்பைன்ஸ், மணிலாவிலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம், பறவைகள் மோதியதால் அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக, பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டுத் திரும்பியது. MH705 விமானம் Ninoy Aquino அனைத்துலக விமான நிலையத்திற்குப் பத்திரமாகத் திரும்பியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பயணிகள் தெரிவித்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இயந்திரம் செயலிழந்து தீப் பிடித்ததாக எக்ஸ் பயனர் ஒருவர் தெரிவித்தார். விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இயந்திரத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தார். விமானி அவர் தன் குழுவினரின் பாதுகாப்பான நடவடிக்கைக்கு அவர் நன்றி தெரிவித்தார். மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், பயணத் திட்டத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியது.

WATCH OUR LATEST NEWS