கிளந்தான் மாநிலத்திற்கு மார்ச் 30 ஆம் தேதி சிறப்பு விடுமுறை

கோத்தா பாரு, மார்ச்.26-

ஹரிராயா பெருநாளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏதுவாக கிளந்தான் மாநிலத்தில் வரும் மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளந்தானைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நஸ்ஸுருடின் டாவுட் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS