புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு: உயிரிழப்பு ஏதும் இல்லை

சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-

புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று காவல் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை. சம்பவ இடத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று சுபாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்துள்ளார்.

அச்சம்பவத்தில் காயமடைந்த 111 பேர் செர்டாங், சைபர்ஜெயா, புத்ராஜெயா உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 பேர் சிவப்புப் பிரிவிலும், 55 பேர் மஞ்சள் பிரிவிலும், 43 பேர் பச்சை பிரிவிலும் உள்ளனர். 75 பேர் செர்டாங், சைபர்ஜெயா, புத்ராஜெயா மருத்துவமனைகளிலும், 36 பேர் சுங்கை பூலோ உள்ளிட்ட பிற மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். சமூக ஊடகங்களில் நேற்று ஒருவர் தீக்காயங்களால் உயிரிழந்ததாக பரவிய தகவல் உண்மையில்லை என காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS