தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் அஜித்துடன் இணைந்து இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஸ்வாசம், ஏகன், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால், அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க மறுத்த விஷயம் பலருக்கும் தெரிந்திருக்காது.
ஹிந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தைத் தெலுங்கில் பவன் கல்யாண் ரீமேக் செய்து நடித்திருந்தார். இப்படத்தில் பவன் கல்யாணியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவைக் கேட்டுள்ளனர். ஆனால், அது மிகவும் சிறிய கதாபாத்திரம் என்பதால், அப்படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டாராம்.
பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்க நயன்தாராவிற்கு விருப்பம் இருந்த போதும், அந்த கதாபாத்திரம் சிறிது என்பதன் காரணமாகவே இப்படத்தில் நடிக்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பின், அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.