நிங்போ, ஏப்ரல்.09-
சீனா, நிங்போவில் நடைபெற்று வரும் ஆசிய பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் நாட்டின் ஆடவர் இரட்டையர் பிரிவு வீரர்களான கோ ஸி பெஃயும் நுர் இஸ்ஸுடின் ரும்சனியும் வெற்றி பெற்றனர். அவர்கள் ஜப்பானிய இணையை நேரடி செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுஜ்கு முன்னேறினர்.
உலகத் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள தேசிய ஜோடி, ஜப்பானிய விளையாட்டாளர்களை 37ழே நிமிடங்களில் வெற்றி கொண்டனர். கடந்தாண்டு அப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அவர்கள் அடுத்த சுற்றில் தாய்லாந்து இணையைச் சந்திக்கின்றனர்.
இவ்வேளையில், தேசிய மகளிர் ஒற்றையர் பிரிவு வீராங்கனை கோ ஜின் வேய்யும் வெற்றியைப் பதிவு செய்தார். அவர் தைவானிய விளையாட்டாளரை நேரடி செட்களில் தோற்கடித்தார். அடுத்த சுற்றில் ஜின் வேய், தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார்.