மாரி செல்வராஜூடன் கைகோர்க்கும் தனுஷ்

நடிகர் தனுஷ் தனது 56 ஆவது படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் அண்மையில் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS