நீரஜ் கய்வான் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘ஹோம்பவுண்ட்.’ இப்படத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர் மற்றும் விஷால் ஜெத்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கரண் ஜோஹர், அதர் பூனவல்லா, அபூர்வா மேத்தா மற்றும் சோமன் மிஸ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. வரும் மே 13 முதல் மே 24 வரை இந்த கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் ‘அன் செர்ட்டெய்ன் ரிகார்ட்’ என்ற பிரிவில் ‘ஹோம்பவுண்ட்’ தேர்வாகி இருக்கிறது.
இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன்ஸ் விழாவில், கய்வானின் முதல் படமான ‘மசான்’ படம் இதே பிரிவில் தேர்வாகி விருதுகளை வென்றிருந்தது. இதில் விக்கி கவுசல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.