கோலாலம்பூர், ஏப்ரல்.11-
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் கட்சி உறுப்பினர்கள், நெறிமுறை மதிப்புகளையும், குடும்ப உணர்வையும் பேணுமாறு அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
பிரிவையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய கலாச்சாரத்தைத் தவிர்த்து, குடும்ப உணர்வுடனும், நெறிமுறைகள் நிறைந்ததாக பிகேஆர் தலைமைத்துவத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தாம் வலியுறுத்துவது போல் கெஅடிலாான் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. மக்கள் போராட்டத்திற்கான ஒரு தளமாகும். எனவே நேர்மை, நம்பிக்கை மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் உறுப்பினர்களின் அபிமானத்தைப் பெற வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.