ஆசிய பூப்பந்து போட்டி: தேசிய கலப்பு இரட்டையர் தோல்வி

நிங்போ, ஏப்ரல்.11-


சீனா, நிங்போவில் நடைபெற்று வரும் ஆசிய பூப்பந்து போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியா அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. காலிறுதியில் தேசிய இணையான கோ சூன் ஹுவாட்டும் ஷெவோன் லாயும் இந்தோனேசிய ஜோடியிடம் நேரடி செட்களில் தோல்வி கண்டனர்.

முதல் செட்டில் தேசிய இணை 15-21 என்றும் இரண்டாம் சுற்றில் 11-21 என்றும் அவர்கள் வீழ்ந்தனர். எனவே காலிறுதியுடன் அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தோனேசிய மாஸ்டர்ஸ், அகில இங்கிலாந்து, சுவிர்சலாந்து பூப்பந்து போட்டிகளுக்குப் பிறகு இந்த பருவத்தில் சூன் ஹுவாட்-ஷெவோன் இணை காலிறுதியில் தோல்வி காண்பது இது நான்காவது முறையாகும்.

இந்நிலையில் ஆசிய பூப்பந்து போட்டியில் மலேசியாவின் போராட்டம் தொடர்கிறது.

WATCH OUR LATEST NEWS