சாண்டோ டொமிங்கோ, ஏப்ரல்.11-
டொமினிக் குடியரசில் இரவு விடுதி ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் என்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களை மீட்பதிலும், இடிபாடுகளை அகற்றுவதிலும், மீட்புப்படையினர் சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து 189 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.