தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகக் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். அவர் நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. ஆனால் அத்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, தனது 237-வது படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கமலின் 237-வது படத்தின் அண்மைய தகவல் வெளியாகி உள்ளது. அவ்வகையில், ஆக்சன் கதைக்களத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் தயாரிப்பு வேலைகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறதாம்.
அப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.