கோலாலம்பூர், ஏப்ரல்.15-
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியின் நல்லுடலுக்கு துன் மகாதீர் முகமது இன்று காலையில் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
2003 ஆம் ஆண்டு தம்மிடமிருந்து பிரதமர் பதவியை ஏற்ற அப்துல்லாவிற்கு துன் மகாதீர், அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா மற்றும் மகன் முக்ரிஸ் மகாதீர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல்லாவின் உடல் கிடத்தி வைக்கப்பட்டு இருந்த தேசிய பள்ளிவாசலுக்கு துன் மகாதீர் தம்பதியர் காலை 11 மணியளவில் வந்தடைந்தனர். சுமார் பத்து நிமிடம் அவ்விடத்தில் துன் மகாதீர் செலவிட்டார்.